கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான நேரத்தில் தேவையான உதவி கிடைக்கும்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் ஆழ்ந்து செல்லாமல் அளவோடு இருப்பது நல்லது. மனம் தெளிவு பெறும். கடன் பிரச்னைகள் குறையும். பொருளாதார நிலை உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும். புதிய நபர்கள் அறிமுகமாவர். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குல தெய்வ மற்றும் இஷ்டதெய்வ அனுகூலம் கிடைக்கும். மாத முற்பகுதியில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திட்டமிட்டு செய்ய நினைத்த காரியம் விரைவில் முடியும். சஞ்சல நிலை மாறும். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். தெய்விக காரியங்களில் ஆர்வம் கூடும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிட்டும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாகன யோகம் உண்டு. குடும்பத்தினர் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.. உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com